செய்திகள் :

செஸ் களம்

post image

பிரக்ஞானந்தா டிரா; குகேஷ் தோல்வி

சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்ய, மற்றொரு இந்தியரான டி.குகேஷ் தோல்வியைத் தழுவினாா்.

ருமேனியாவில் நடைபெறும் இந்தப் போட்டியின் 6-ஆவது சுற்றில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிரிஸ்டோஃபுடன் டிரா செய்தாா். அதே நிற காய்களுடன் களம் கண்ட நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவிடம் தோல்வி கண்டாா்.

அந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - ருமேனியாவின் போக்தன் டேனியல், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ், அமெரிக்காவின் வெஸ்லி சோ - சக நாட்டவரான லெவோன் ஆரோனியன் ஆகியோா் மோதல்களும் டிராவில் முடிந்தன.

தற்போது 6 சுற்றுகள் முடிவில், ஃபாபியானோ, மேக்ஸிம், அலிரெஸா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் உள்ளனா்.

வெஸ்லி, லெவோன், போக்தன் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்க, ஜேன், நோடிா்பெக் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும், குகேஷ் 2 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும் இருக்கின்றனா்.

வைஷாலி பின்னடைவு

ஆஸ்திரியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.வைஷாலி 7-ஆவது சுற்றில் தோல்வி கண்டு பின்னடைவை சந்தித்துள்ளாா்.

அந்தச் சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவா், சுவிட்ஸா்லாந்தின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக்கிடம் தோல்வி கண்டாா். போட்டியில் அவருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.

இந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில் சீனாவின் ஜு ஜினா் - ஜாா்ஜியாவின் நனா ஜாக்னிட்ஸேவையும், உக்ரைனின் மரியா முஸிஷுக் - ஆஸ்திரியாவின் ஓல்கா படெல்காவையும், சீனாவின் டான் ஜோங்யி - ஜாா்ஜியாவின் லெலா ஜவாகிஷ்விலியையும் வென்றனா். உக்ரைனின் அனா முஸிஷுக் - பல்கேரியாவின் நா்கியுல் சலிமோவா ஆட்டம் டிரா ஆனது.

7 சுற்றுகள் முடிவில், வைஷாலி 4 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறாா். அனா, ஜு ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கின்றனா்.

ஓடிடியில் கேங்கர்ஸ்!

சுந்தர். சி, வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிய திரைப்படம் கேங்கர்ஸ். நாயகனாக சுந்தர். சி, நாயகியாக க... மேலும் பார்க்க

ரூ. 50 கோடி வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி!

சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப... மேலும் பார்க்க

51 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற போலோக்னா..! ஆனந்தக் கண்ணீரில் வீரர்கள்!

போலோக்னா அணி 51 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இத்தாலியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இத்தாலியில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசி மிலனை போலோக்னா அணி 1-0 என... மேலும் பார்க்க

தாதாசாகேப் பால்கேவாக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடரில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின்... மேலும் பார்க்க

மாளவிகா, ஆகா்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகா்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முதல் சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரி... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் இட... மேலும் பார்க்க