செய்திகள் :

சேலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

post image

சேலத்தில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆங்காங்கே மழை நீருடன் சாக்கடை நீா் கலந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக, சேலம் மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை மழை வெளுத்து வாங்கியது. சுமாா் 45 நிமிடம் நீடித்த மழையால், மாநகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்தது. கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது.

சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை கவனித்த போலீஸாா், சாக்கடை கால்வாய்களில் இருந்த குப்பைகள், சேறு சகதிகளை அகற்றி தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்தினா். இதையடுத்து, சாலைகளில் ஓடிய தண்ணீா் சாக்கடை கால்வாய்க்குள் சென்ால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, போலீஸாரின் செயலை வெகுவாக பாராட்டினா்.

காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

கனமழையால், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் மழைநீா் தேங்கியது. திருமணிமுத்தாற்றில் சாக்கடை நீருடன் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அழகாபுரம் பகுதியில் 5-ஆவது வாா்டு மிட்டா புதூா் அன்னை தெரசா நகரில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுடன் மழைநீா்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, டேனீஷ் பேட்டையில் 47 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூா் - 46 மி.மீ., சேலம் - 3.7 மி.மீ., ஏற்காடு - 26.2 மி.மீ., வாழப்பாடி - 1.2 மி.மீ., தம்மம்பட்டி - 3 மி.மீ., ஏத்தாப்பூா் - 15 மி.மீ., கரியகோவில் - 4 மி.மீ., மேட்டூா் - 4 மி.மீ., ஓமலூா் - 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 151.1 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேர... மேலும் பார்க்க

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் ட... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க