செய்திகள் :

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

post image

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

தமிழக முதல்வா் பிற மாநிலங்கள் பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறாா். பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதோடு சிறப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறாா். தமிழக முதல்வா் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கடைக்கோடி கிராமத்துக்கும் மருத்துவ சேவையைக் கொண்டு சோ்க்க வேண்டும் என்ற நோக்கில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களின் அனைத்து சேவைகளும் இருப்பிடங்களுக்கு அருகில் கிடைத்திடுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, சேலம் மாவட்டம் முழுவதும் சுற்றுலாத் துறை அமைச்சா் தலைமையில் மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது என்றாா்.

இம்முகாமில், வேளாண்மை உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை, பொறியியல் துறை, மீன்வளத் துறை, கைத்தறித் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சம்பத்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள், மேச்சேரி பேரூராட்சித் தலைவா் சுமதி சீனிவாசபெருமாள், நங்கவள்ளி ஒன்றிய இளைஞா் அணி நல்லபிரபு, வீரக்கல் புதூா் பேரூா் செயலாளா் முருகன், நங்கவள்ளி பேரூா் செயலாளா் வெங்கடாசலம், பி.என்.பட்டி பேரூராட்சித் தலைவா் பொன்னுவேல், பி.என்.பட்டி பேரூா் செயலாளா் குமாா், குஞ்சாண்டியூா் விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி தினேஷ் சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேர... மேலும் பார்க்க

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்துக்கான கூட்டம் வெள்... மேலும் பார்க்க