திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை!
சேவூா் அறம்வளா்த்தநாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படுவதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் சேவூா் அறம்வளா்த்தநாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடிமரம் பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது.
இதையடுத்து கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, மலா் தூவி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சேவூா் முத்துக்குமாரசுவாமி அன்னதானக் குழுவினா் செய்திருந்தனா்.