செய்திகள் :

சைஃப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்ட குற்றவாளி! 20 தனிப்படைகள் அமைப்பு!

post image

நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில், அவரி குற்றவாளி ரூ.1 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைத்துள்ளது.

சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!

சைஃப் அலிகானுக்கு கழுத்து உள்பட 6 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு லீலாவதி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில், “கொள்ளையடிக்க வந்தவர், அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது உடைகளை மாற்றியிருக்கலாம். அவரைப் பிடிக்க 20 தனிப்படைக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியுள்ளோம். மேலும், குற்றவாளி மீது முன்பு ஏதாவது குற்றப் பதிவு உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

சைஃப் மற்றும் கரீனா கபூர்-கானின் இளைய மகன் ஜெஹ் ஆகியோரின் அறைக்குள் ஊடுருவிய நபர் முதலில் நுழைந்து, எதிர்கொண்டபோது ரூ.1 கோடி கேட்டுள்ளார். அதன்பின்னர் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார்” என்றனர்.

சயீஃப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி?

ஷரோன் ராஜ் கொலை: கிரீஷ்மா குற்றவாளி என நிரூபித்த முக்கிய தடயம் எது?

கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களில், தடயமே இல்லாமல் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடிய டிஜிட்டல் ஆதாரம்தான் முக்... மேலும் பார்க்க

கேஜரிவால் கொள்கையால் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாள்களே உள்ளநிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர். தில்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களான பாப்ரோலா வார்டு கவுன்சிலர் ரவீந்தர் சோலங்கிய... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு தன்னிகரற்றத் தேர்வு இந்தியா: பிரதமர்

போக்குவரத்துத் துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாரத மண்டபம், தலைநகரில் உள்ள யசோபூ... மேலும் பார்க்க

பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

புது தில்லி: பாரத போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப... மேலும் பார்க்க

கேரளத்தை உலுக்கிய வழக்கு: காதலனைக் கொன்ற பெண்ணுக்கு நாளை தண்டனை!

கேரளத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவர் 2022 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. கேரளத்தில் பராசலாவைச் சேர்ந்த ஷரோன் ராஜ் மற்றும் கன்னியாகுமரியைச் சே... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவர்களுக்கு சலுகை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.தில்லி மெட்ரோ ரயில் கட்டணத்தில் மாணவர்களுக்கு 50... மேலும் பார்க்க