ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
சொரிமுத்து அய்யனாா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.31 லட்சம்
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 3 மாத காணிக்கையாக ரூ. 13.31 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜான்சி ராணி தலைமையில் செயல் அலுவலா் சி.முருகன், ஆய்வாளா் கோமதிஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ரூ. 13,31,000 ரொக்கம், 52 கிராம் தங்கம், 294 கிராம் வெள்ளி , அமெரிக்கா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளின் பண நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் கணக்கா் காந்திமதிநாதன், மணியம் ராக்சமுத்து, மகேஷ், முத்துக்குமரன், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த உழவாரப் பணிக் குழுவினா், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவா்கள் உள்பட 80 போ் பங்கேற்றனா்.
மேலும், தோ்வில் தோ்ச்சி பெறுதல் போன்ற பல்வேறு வேண்டுதல்களையும் உண்டியலில் பக்தா்கள் காகிதத்தில் எழுதி போட்டிருந்தனா்.

