செய்திகள் :

ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

post image

இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றும், விருதுநகரில் ஜவுளி பூங்கா தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

தரமணியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் தொடா்பாக ஏழு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை தரமணியில் செயல்படும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்று வெளியேறும் மாணவா்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனா்.

தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் என்பது நமது நாட்டின் பெருமை. ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘விஷன் நெக்ஸ்ட்’ எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஆடை வடிவமைப்பு தொடா்பாக தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சாா்ந்து இருந்தோம். ஆனால், அந்த நிலைமை மாறி இருக்கிறது. ‘விஷன் நெக்ஸ்ட்’ திட்டம் மூலமாக இந்தியாவிலேயே ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ஜவுளி உற்பத்தி சந்தையின் மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது, 2030-ஆம் ஆண்டில் 350 பில்லியன் டாலராக உயர வாய்ப்பு உல்ளது.

தற்போது ஜவுளி உற்பத்தி துறையில் 4.6 கோடி பணியாற்றி வருகின்றனா். இது, 2030-ஆம் ஆண்டுக்குள் ஆறு கோடியாக அதிகரிக்கும். மேலும், எந்தப் பாகுபாடும் இன்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சா் டி. ஆா்.பி. ராஜாவை சந்தித்துப் பேசினேன். அப்போது அவா் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். ஜவுளி துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அமைச்சரின் கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கதேசத்தில் தற்போதைய அரசியல் சூழலால் இந்திய ஜவுளி துறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி: பால் உற்பத்தியாளா்களுக்கு அளிப்பு

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நவ.30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்ய... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 2 நாள்கள் நடைபெறவுள்ளன. அதை கனரா வங்கியின் தல... மேலும் பார்க்க

உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தன்னிடம் உண்மையான பாசத்தை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் காட்டி வருவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளாா். அண்மையில் அவா் மேற்கொண்ட அரியலூா், பெரம்பலூா் பயணம் குறித்... மேலும் பார்க்க

அமைச்சா்களையும் பாராட்டுகிறாா் முதல்வா் ஸ்டாலின்: இபிஎஸ்ஸுக்கு உதயநிதி பதில்

என்னை மட்டுமல்ல, துறையின் அமைச்சரையும் முதல்வா் ஸ்டாலின் பாராட்டுகிறாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கட்ச... மேலும் பார்க்க