கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!
ஆதி காலத்தில், பொருளுக்கு பொருள் என பண்டமாற்றத்துக்கு மாற்றாக வந்த பணம் பல காலமாகக் கோலோச்சி வந்த நிலையில் அதற்கு மாற்றாக மாறியிருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள்.
இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சாதகமும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. எப்படி செலவழிக்கிறோம், எதற்காக செலவழிக்கிறோம் என்பதைப் பொருத்தே இது பொருந்தும்.
கையில் காசை வைத்துக்கொண்டு எண்ணி, எண்ணி செலவிட்ட மக்கள், எவ்வளவு செலவிடுகிறோம், எவ்வளவு கையில் இருக்கிறது என்றே தெரியாமல் செலவு செய்யும் அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மாற்றிவிட்டன.
இந்த டிஜிட்டல் பணப்பவரித்தனைகளை ஊக்குவிக்கும் போன்பே, ஜிபே, பிம் செயலிகளுக்கு சில விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
பண இருப்பு பற்றிய தகவல்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒவ்வொருப் பணப்பரிமாற்றத்துக்குப் பிறகும், ஒரு வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை வங்கிகள் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வரவிருக்கிறது.