டாடா ஸ்டீல் செஸ்: காா்ல்ஸன், கேத்ரீனா முதலிடம்
டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனும், மகளிா் பிரிவில் ரஷியாவின் கேத்ரீனா லேக்னோவும் முதலிடத்தில் உள்ளனா்.
9 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் காா்ல்ஸன் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். இந்தியாவின் நட்சத்திர வீரா் அா்ஜுன் எரிகைசியுடன் மோதிய ஆட்டத்தில் 20-ஆவது நகா்த்தலில் காா்ல்ஸன் தோற்றாா். கடைசி சுற்றில் விதித் குஜராத்தியுடன் டிரா கண்டாா் காா்ல்ஸன்.
இந்திய இளம் வீரா் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளாா். முதல் 3 கேம்களில் தோற்றாலும், தொடா்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றாா் பிரக்ஞானந்தா.
எரிகைசி, ரஷியாவின் டேனில் டுபோவ் 5.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனா்.
மகளிா்: லேக்னோ முதலிடம்
மகளிா் பிரிவில் 7 புள்ளிகளுடன் கேத்ரீனா லேக்னோ முதலிடத்தில் உள்ளாா். 5 தொடா் வெற்றி, 4 டிராக்களை கண்டாா் லேக்னோ.
வலேன்டினா குனியா 6 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளாா். ரேபிட் சாம்பியன் அலெக்சான்ட்ரா 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளாா்.