செய்திகள் :

டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; காட்டிக்கொடுத்த தீ விபத்து - கொலிஜியம் முடிவு?

post image

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஸ்வந்த் வர்மாவை திடீரென அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. நீதிபதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கட்டு கட்டான ரூபாய் நோட்டுகள் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள்விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு தான் மேற்கொள்கின்றது.

யஸ்வந்த் வர்மா

இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான யஸ்வந்த் வர்மாவை அவர் ஏற்கனவே பணியாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் அமைப்பு முடிவெடுத்தது வழக்கமானது கிடையாது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் யஸ்வந்த் வர்மா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி டெல்லியில் உள்ள யஸ்வந்த் வர்மாவிற்கு ஒதுக்கப்பட்ட நீதிபதிகளுக்கான அரசு பங்களாவில் திடீரென தீப்பற்றி உள்ளது. அந்த நேரத்தில் யஸ்வந்த் வர்மா டெல்லிக்கு வெளியில் இருந்திருக்கிறார். இதனை அடுத்து அவரது குடும்பத்தார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புத் துறையில் இருந்து தகவலின் படி மார்ச் 14ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது நீதிபதியின் வீட்டிலிருந்த ஸ்டோர் ரூமில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்படுத்தி இருக்கின்றனர். பின்னர் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுப்பதற்காக தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது நீதிபதியின் அறையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து அதிர்ந்து போன அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சஞ்சீவ் கண்ணா

இதனை அடுத்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்புடன் ஆலோசனை நடத்திய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே ஒருமித்த கருத்தாக சம்பந்தப்பட்ட நீதிபதியை உடனடியாக பணியிட மாற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டு அவர் ஏற்கனவே பணியாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளனர்.

இன்றைய அலுவல்களில் உச்சநீதிமன்றத்தின் பல நீதிபதிகள் செயல்படவில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உள்ளிட்ட பல அமர்வுகள் மதியம் ஒரு மணிக்கு முன்பாகவே அலுவல்களை முடித்துக் கொண்டனர்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உள் விவகாரத்திற்கான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வு இன்று செயல்படவில்லை. நீதிபதி விடுப்பில் சென்று விட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர உப்பாத்தியா அமர்வில் உட்கார்ந்த போது, வழக்கறிஞர்கள் சார்பாக இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. "ஏற்பட்டுள்ள சம்பவம் கடுமையான வேதனையை கொடுத்திருக்கிறது எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்ட தலைமை நீதிபதி, "உங்களது மனநிலையில் தான் நானும் இருக்கிறேன்" என கூறினார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் மிகப்பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "நீதித்துறையின் சுதந்திரத்தை நாம் இழந்து விட்டோமா?" என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை வெளியிட்டு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சியை உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ் என் சுக்லா அவரது பதவி காலத்தில் 2.45 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் பதவியில் இருந்த போதே வழக்கு பதிவு செய்தது.

தனஞ்செய் நிகம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மகாராஷ்டிரா மாநிலத்தின் சாஸ்திர மாவட்டத்தின் முதன்மை நீதிபதியான தனஞ்செய் நிகம், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்க 5 லட்ச ரூபாய் கேட்டதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`மனிதாபிமானமற்ற அணுகுமுறை...' - அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், "மார்பகத்தைப் பிடிப்பதையோ... அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதையோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் ... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் பின்னணி என்ன?

தொல்லியல் துறையினர், திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதுரையைச் சேர்ந்த சோலைக்கண்ணன், வழக்கறிஞர் முத்து... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய... மேலும் பார்க்க

FSO பதவி: `கூடுதல் தகுதியைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்ய முடியாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

`குறிப்பிட்ட பணியில் இணைய, தேவையான தகுதி என பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிகம் கற்ற நபரை அவரது கல்வித்தகுதியை மட்டுமே காரணமாக காட்டி பணியில் இணைக்காமல் நிராகரிக்க கூடாது' என்று உச்சநீதிமன்றம... மேலும் பார்க்க

சென்னை வேல் யாத்திரை: `தெளிவான உத்தரவு; தலையிட விரும்பவில்லை’ - மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம்

இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பார... மேலும் பார்க்க

`ரூ.1 லட்சம் இழப்பீடு' - மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பே... மேலும் பார்க்க