செய்திகள் :

தங்க முலாம் பூசிய கழிவறையைப் பயன்படுத்தும் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு!

post image

ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால் தனது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிவறையைப் பயன்படுத்துவதாக தில்லி பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கோவிட் தொற்று காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியிருந்த போது சீஷ் மஹால் எனப்படும் தனது ஆடம்பர இல்லத்தைப் புதுப்பிக்க பல கோடி ருபாய் செலவு செய்ததாக பாஜகவினரால் முன்னர் சர்ச்சை எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் கேஜரிவால் தனது வீட்டில் தங்க முலாம் பூசிய கழிவறையைப் பயன்படுத்துவதாக தில்லி பாஜக தலைவர் ஆர்பி சிங் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “இதுபோன்ற தங்க முலாம் பூசிய கழிவறையை கேஜரிவால் தனது வீட்டில் பயன்படுத்துகிறார். ரூ. 56 கோடி மதிப்புள்ள அவரது சீஷ் மஹால் எனப்படும் ஆடம்பர வீட்டில் இதுபோல 12 கழிவறைகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டுமே ரூ. 1.44 கோடி” என்றார்.

மேலும், “அவர்கள் இலவசங்களைக் கொடுத்து உங்கள் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவர்களின் தவறுகள் குறித்து நாங்கள் மக்களிடம் சொல்கிறோம். இங்குள்ள கழிவறைகளின் நிலையைப் பாருங்கள். பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் நல்ல கழிப்பறை, குளியலறை கட்டித் தருவோம். இலவசங்களின் பெயரில் தில்லியை சூறையாட விடக்கூடாது" என்றும் ஆர்பி சிங் தெரிவித்தார்.

இதையும் படிக்க | இசிஜி சோதனை நடத்திய துப்புரவுப் பணியாளர்: மும்பையில் அதிர்ச்சி!

பாஜக தலைவர் விஜய் கோயல் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புகள் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு மட்டுமே. அசுத்தமான குழாய் நீர், மாசுபட்ட யமுனை , காற்று மாசு, ஊழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளாக உழைக்காதவர்கள் இலவசங்களை அறிவித்து தேர்தலில் வெற்றி பெற விரும்புகின்றனர்" என்று விமர்சித்தார்.

குடிபோதையில் ஓட்டுநர்: ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண்!

பெங்களூருவில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் வழிமாறிச் சென்றதால் பெண் பயணி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மீது பெங்களூரு காவல்துறையில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் பு... மேலும் பார்க்க

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை மு... மேலும் பார்க்க

மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பதவியேற்பு!

மணிப்பூரின் 19-வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றார்.அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபத... மேலும் பார்க்க

மோசமான வானிலை: தில்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய தலைநகரில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் க... மேலும் பார்க்க

ஒடிசா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு!

ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்,... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரிய மூன்றில் ஒருவருக்கு பணம் நிலுவை!

2024 நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு இன்னும் பணம் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.காப்பீட்ட... மேலும் பார்க்க