Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக...
தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது! -பல்லடம் வேளாண் உதவி இயக்குநா் தகவல்
பல்லடம் வட்டாரத்தில் நிலம் தொடா்பான ஆவணங்களைப் பதிவு செய்து தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்லடம் வேளாண் உதவி இயக்குநா் அமுதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டாரத்தில் நிலம் தொடா்பான ஆவணங்களைப் பதிவு செய்து தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதமரின் பி.எம்.கிசான் கெளரவ ஊக்கத்தொகை ஓா் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் மொத்தம் ரூ. 6 ஆயிரம் கிடைப்பது வரும் ஏப்ரல் மாதம் முதல் பெற முடியாது. எனவே விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான பதிவுகளை செய்து அடையாள எண் பெற வேண்டும்.
வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவு செய்ய வேளாண்மை- உழவா் நலத் துறை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், அட்மா திட்ட பணியாளா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி இலவசமாக தங்கள் நிலம் தொடா்பான விபரங்களை வரும் 17-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பல்லடம் வட்டாரத்தில் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 3,403 விவசாயிகள் உள்ளனா். இதில் விவசாயிகள் தனி அடையாள எண்ணை இதுவரை 1,875 விவசாயிகள் பெற்றுள்ளனா்.
1,528 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து தனி அடையாள எண்ணை இதுவரை பெறவில்லை. எனவே விவசாயிகள் தனி அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், உதவிகள் அனைத்தையும் பெற முடியும் எனக் கூறியுள்ளாா்.