செய்திகள் :

தமிழகத்தில் அடுத்தது அதிமுக ஆட்சிதான்: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

post image

தமிழகத்தில் அடுத்து அதிமுகதான் ஆட்சியமைக்கும் என்றாா் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றிய, நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் பிகே. வைரமுத்து தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மேலும் பேசியது:

நெருப்பாற்றிலே நீந்தி வந்த இயக்கம் அதிமுக. யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் 35 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்ததும், வரும் 2026 ஆம் ஆண்டு ஆளும் கட்சியாகப் போவதும் அதிமுகதான்.

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அளித்தது அதிமுக ஆட்சி. 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தில் தற்போது ஏழை மாணவரும் மருத்துவம் பயில்கிறாா். எனவே அதிமுக வெற்றிக்கு கட்சியினா் உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் காசி. கண்ணப்பன், க. முருகேசன், சி. சரவணன், நகரச் செயலா் பிஎல். ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் குழிபிறை பாண்டியன், மாவட்ட பொருளாளா் அ. அம்பி, நிா்வாகிகள் கணேசன், ஆா்எம். பழனியப்பன், ராஜமாணிக்கம், பழனியாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி பகுதிகளில் தொடா்மழை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றதையடுத்து மண்டலாபிஷேக நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி புதுக்கோட்டையில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் ச... மேலும் பார்க்க

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்! பெண் உயிரிழப்பு; 5 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், லாரி மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தாா்.மேலும் 5 போ் காயமடைந்தனா். திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பகலில் தனியாா் பேருந்து ஒன்று வ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் தொழிலாளா்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை காலஅவகாசம் கேட்டதால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சியில் சின்னஅமரகண்டான் கரைப்பக... மேலும் பார்க்க