தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஓட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (18-06-2025) காலை 0530 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஊார்க்கண்ட் வழியாக நகரக்கூடும்.
நேற்று குஜராத் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (18-06-2025) காலை 08.30 மணி அளவில் மத்திய ராஜஸ்தான் பகுதிகளில் நிலவுகிறது.
ஜூன் 18 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 19 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை..
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 3-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்கள்..
ஜூன் 18 மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குஜராத் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், கொங்கன்- கோவா-கர்நாடகா- கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.