செய்திகள் :

திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

post image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் குடமுழுக்கு நேரம் குறித்தும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8,000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

வேள்விச்சாலை வழிபாடு நாள்களில் வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

சாகித்ய விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

பால சாகித்ய புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் சரவணன் மற்றும் யுவ புரஸ்கார் விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்க... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க