செய்திகள் :

Actor Sri: ``என்னுடைய முதல் நாவல் MAY EYE COME IN?" - நடிகர் ஶ்ரீ சொன்ன அப்டேட்

post image

சின்னத் திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ எனும் ஶ்ரீராம் நடராஜன். `வழக்கு எண் 18/9', `மாநகரம்', `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', `வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான நடிகராக உருவாகிவந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான `இறுகப்பற்று' படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீ, இரண்டு நாவல்கள் எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகர் ஶ்ரீ நடித்த திரைப்படத்துக்கு அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற பேச்சு எழுந்தது.

இதற்கிடையில்தான் சமீபத்தில் நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் முடியின் நிறத்தை மாற்றி, உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்த நிலையில், நடிகர் ஶ்ரீ `MAY EYE COME IN?' என்ற நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``18 ஜூன் 2025, புதன்கிழமை. எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN?"-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. "AMAZON.IN"-ல் உங்கள் கிண்டில் பிரதிகளை இப்போதே பெறுங்கள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Ajith: "இது என் நேரம், நான் பின்வாங்க மாட்டேன்... ஏன் என்னால் முடியாது?" - அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் அஜித் நடித்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படமும், ஏப்ரல் மாதத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியானது. அஜித்இப்போத... மேலும் பார்க்க

Kaali Venkat: "நான் அழுதிடவே கூடாதுன்னு நினைச்சேன்" - பட விழாவில் கலங்கிய காளி வெங்கட்

காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில் கடந்த ஜூன் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்திற்கு அடுத்த... மேலும் பார்க்க

Kuberaa: தனுஷின் குபேரா படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்; CBFC நடவடிக்கை

தனுஷின் நடிப்பில் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’வில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர... மேலும் பார்க்க

"நெல் ஜெயராமன் தன் மகனுக்கு என்ன செய்திருப்பாரோ அதை சிவகார்த்திகேயன் செய்கிறார்!"- இரா. சரவணன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர் நெல் ஜெயராமன். தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2018-ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவரின... மேலும் பார்க்க

Arya: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு?; பரவும் தகவல் உண்மையா? - ஆர்யா சொல்வதென்ன?

ஆர்யா நடித்திருக்கும் 'Mr.X' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தாண்டி, பா. இரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' படத்திலும், 'ஆனந்தன் காடு' படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில... மேலும் பார்க்க