செய்திகள் :

தமிழகத்தில் ஜூன் 11 வரை மழைக்கு வாய்ப்பு: 10 இடங்களில் வெயில் சதம்

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்து. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதே நேரத்தில் மாநிலத்தில் ஜூன் 11-ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. பிற இடங்களில் இயல்பையொட்டியே இருந்தது.

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா், பரங்கிப்பேட்டை - (தலா) 103.1, மதுரை நகரம் - 102.56, ஈரோடு, பரமத்திவேலூா் - (தலா) 102.2, அதிராமபட்டினம் - 100.94, திருச்சி, சென்னை மீனம்பாக்கம் - (தலா) 100.58, தஞ்சாவூா் - 100.4 டிகிரி என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும்.

மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை இடி, மின்னல் , காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 6-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க