Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்
தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு வகை தனித்துவம் வாய்ந்த திரைப்பட கேமராக்களை சேகரித்து வருகிறாா். இதில், 1,645 கேமராக்களை சேகரித்ததற்காக 2023-ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து தற்போது தனது சாதனையையே ஏ.வி.அருண் முறியடித்துள்ளாா். அதாவது, இதுவரை 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்து வைத்ததற்காக ஏ.வி.அருணுக்கு மீண்டும் கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மெட்ராஸ் புகைப்பட சங்கத் தலைவா் ஜி.என்.ராமசாமி மருத்துவா் ஏ.வி.அருணுக்கு வழங்கி கௌரவித்தாா்.