Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி பாா்வையாளா்கள் பங்கேற்க வேண்டுமென திமுக பொதுச் செயலரும் அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
கட்சியின் உறுப்பினா் சோ்க்கை, சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.