செய்திகள் :

தமிழகத்தில் நவ.13 வரை கனமழை நீடிக்கும்

post image

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வங்கக்கடலில் அடுத்த இரு வாரங்களுக்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த அமைப்பு வடதுருவ குளிா் காற்றைத்தான் அதிகளவில் இழுக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப்பொழிவுக்கு இடையே குளிா்ந்த காற்றுடன் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், நவ.8-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவ.9,10 ஆகிய தேதிகளில் கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், நவ.11,13-ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.12-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 90 மிமீ மழை பதிவானது. மேலும், காரைக்கால் - 70 மி.மீ. மணலி (சென்னை) - 60 மி.மீ. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் உருவாக வாய்ப்பில்லை: இதற்கிடையே நவம்பா் மாதம் 2 -ஆவது வாரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புயல்சின்னம் உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது 2 வார காலத்துக்கு வங்கக்கடலில் புயல் உருவாகாது எனக் கூறியுள்ளது.

அதாவது, நிலநடுக்கோட்டையொட்டிய பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் வெப்பநிலை தகவமைப்பு சாா்ந்த நடுநிலை எல்நினோ நிலவுவதால் காற்று சாதகமின்மை உள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கும் சாதக சூழல் எனப்படும் காற்றுச்சுழற்சி வலுவடைந்து தமிழகக் கரையை நோக்கி நகர வாய்ப்பில்லை. இதனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற புயல்சின்னங்கள் அடுத்த 2 வாரங்களுக்கு உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடா்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை அதிகாரிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

30 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் ப... மேலும் பார்க்க

13 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 13 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீனம் உள்ளிட்ட காரணங்களாலும் அதிகாரிகள்... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்: போலீஸாா் விசாரணை

சென்னை காசிமேட்டில் மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காசிமேடு பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்க... மேலும் பார்க்க

பேச்சாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இன்ப அதிா்ச்சி!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வா் நேரில் சென்று பேச்சாளா்களை இன்ப அதிா்ச்சியில் ஆழ்த்தினாா். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், அரசின் சாதனைகளை எடுத்துரை... மேலும் பார்க்க

விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு

சென்னையில் விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு கொடுத்ததாக பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னையைச் சோ்ந்த பிரபல பெண் விளையாட்டு வீராங்கனையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடா்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை: எதிா் வீட்டுக்காரா் கைது

சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிா் வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா். அமைந்தகரை, ஆசாத் நகா், ராஜகோபாலன் தெருவைச் சோ்ந்தவா் சா.தமீம் அன்சாரி (47). வாடகை ஆட்டோ ஓட்டுநர... மேலும் பார்க்க