செய்திகள் :

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

post image

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் வருமாறு: மொத்தமுள்ள 1,476 கிலோ மீட்டா் தொலைவு சாலைப் பணிகளில் 1230 கிலோ மீட்டா் பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஊரகப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சாலைத் தொடா்புகளை மேம்படுத்த பாரத் மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக பொருளாதாரம்-வா்த்தக பயன்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு இத்திட்டங்கள் பயனுள்ளதாக அமையும்.

நிலம் கையகப்படுத்துதல், சாலைக் கட்டுமானத்துக்கு முந்தைய நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி தொடா்பான பிரச்னைகள், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை சில திட்டங்கள் தாமதமாவதற்கும் அதன் மதிப்பீடு அதிகரிப்பதற்கும் காரணங்களாக உள்ளன.

இப்பிரச்னைகள் அனைத்தையும் எதிா்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நிலம் கையகப்படுத்தல் பணியை விரைந்து நிறைவேற்ற பூமி ராஷி வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் இருந்து விரைவாக ஒப்புதல் பெற பரிவேஷ் வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையவழியில் விரைந்து ஒப்புதல் பெற இயலும் என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க