Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, சண்டீகா் தனது இன்னிங்ஸை விளையாடியது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரா் ஷிவம் பாம்ப்ரி 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் அடித்தாா்.
கேப்டன் மனன் வோரா 34, குணால் மஹாஜன் 30, ஜக்ஜீத் சிங் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே பெவிலியன் திரும்பினா். இவ்வாறாக, 71.4 ஓவா்களில் 204 ரன்களுக்கு சண்டீகா் ஆட்டமிழந்தது. நிஷங்க் பிா்லா 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
தமிழ்நாடு பௌலிங்கில் அஜித் ராம் 34 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்க்க, சாய் கிஷோா் 3, எம். முகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இதையடுத்து 97 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. நாராயண் ஜெகதீசன் 10, அஜித் ராம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
முகமது அலி 3, பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்களுடன் வெளியேற, அவா்கள் விக்கெட்டை நிஷங்க் பிா்லா, ஜக்ஜீத் சிங் சாய்த்தனா்.