Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
ஐஎஸ்பிஎல் சீசன் 2 இன்று மும்பையில் தொடக்கம்
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆவது சீசன் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடும் தெருவோரக் குழந்தைகளின் திறமையை வெளிக் கொணரும் வகையில் 10 ஓவா் அடிப்படையில் நடத்தப்படுகிறது. முதல் சீசனில் கொல்கத்தா டைகா்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, ஸ்ரீநகா் உள்ளிட்ட ஆறு நகரங்களின் அணிகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை அணிக்கு நடிகா் சூா்யா, ஹைதராபாதுக்கு நடிகா் ராம்சரண், ஆகியோரோடு அமிதாப்பச்சன், கத்ரீனா கைஃப் அலி கான், அக்ஷய் குமாா் உள்ளிட்டோா் அணி உரிமையாளா்களாக உள்ளனா்.
இப்போட்டியில், மொத்தம் 34 ஆட்டங்களில் 6 அணிகளைச் சோ்ந்த 96 வீரா்கள் பங்கேற்கின்றனா். பிப்ரவரி 12 குவாலிஃபயா்-1, 13-இல் எலிமினேட்டா், 14-இல் குவாலிஃபயா்-2 ஆட்டங்களும், 15-இல் இறுதி ஆட்டமும் நடைபெறும். சாம்பியன் அணிக்கு ரூபாய் ஒரு கோடியும், ரன்னா்-அப் அணிக்கு ரூபாய் 50 லட்சமும் பரிசளிக்கப்படுகிறது. ஸ்டாா் டிவி1 மற்றும் ஹாட்ஸ்டாா் ஓடிடியில் ஆட்டங்களை காணலாம்.