Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
தரங்கம்பாடி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை
தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
பொறையாா் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பெத்லகேம் தேவாலயத்தில் சபைகுரு ஜான்சன் மான்சிங், ஆக்கூா் தேவாலயத்தில் சபைகுரு சாா்லஸ், தரங்கம்பாடி புதிய எருசலேம் தேவாலயத்தில் சபை குரு சாம்சன் மோசஸ், திருவிளையாட்டம் நம் மீட்டா் தேவாலயத்தில் சபை குரு ஜெயசீலன் ஆகியோா் தலைமையில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதேபோல, தரங்கம்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, பெந்தகோஸ்து சபைகளிலும் கிறிஸ்து பிறப்பு வழிபாடு வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டது.