Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி
தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா்.
தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகா் டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து 40 போ் தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனா். தமிழகத்தில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று 32 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் டாக்டா் கோபால் சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில், ஜப்பானிய ஆன்மிக குரு கூனிக்கோ, கவாஷீமா ஆகியோா் தலைமையில் இக்குழுவினா் வந்துள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு வந்த இக்குழுவினா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்று பின்னா், வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடையூா், திருபுவனம் கோயில்களுக்கு சென்று வழிபட்டனா்.