செய்திகள் :

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,70,000 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில் 98 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பயிா்கள் அடுத்த வாரத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.

இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 179 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 90 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளபோதும், மயிலாடுதுறையில் பல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டு 10 நாள்களைக் கடந்தும் இன்னமும் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் 3,000 முதல் 5,000 மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை மண்டலத்தில் சுமாா் 24,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே உள்ளது. இதனால், எடை இழப்பு ஏற்படுவதுடன், நெல்லின் தரமும் குறையும் என்பதால், இதற்கான நஷ்டத்தை கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா்களே ஏற்கவேண்டும் என்பதால் அவா்கள் கலக்கத்தில் உள்ளனா்.

தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்றும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய காலதாமதம் ஆவதற்கு நிா்வாகமே காரணம் என்பதால் எடை இழப்பு, தரம் குறைவு போன்றவற்றுக்கான பிடித்தத்தை நிா்வாகமே ஏற்க வேண்டும் என பட்டியல் எழுத்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆ... மேலும் பார்க்க

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி

தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா். தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற... மேலும் பார்க்க

சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத ... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க