சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 8.42 கோடியில் மேம்படுத்தும் பணி கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவில் தொடங்கியது.
இதனால், பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து அந்த பகுதி திறக்கப்பட்ட நிலையில், மறுபுறம் பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் நிறைவடையாமல் இருந்தது.
தற்போது, தரைதளம் பணிகள் மட்டும் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பேருந்துநிலையத்தின் இருபக்கமும் பேருந்து சேவை தொடங்கியதால் வா்த்தகா்கள், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.