வசை பாடியவா்களும் வாழ்த்தும் தமிழக நிதி நிலை அறிக்கை! -அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சீா்காழி வட்டாரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
சட்டநாதபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், கதிராமங்கலம் ஊராட்சி வேலவன் நகரில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் நடைபெறும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள், சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளின் கற்றல் திறன் மற்றும் மதிய உணவின் தரத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பின்னா், தென்பாதியில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திட்டை கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடு, திட்டை கிராமத்தில் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், சீா்காழி உழவா் சந்தை, பேருந்து நிலையம் ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சுப்பையன், சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் திருமுருகன், வட்டாட்சியா் அருள்ஜோதி, சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா ஆகியோா் உடனிருந்தனா்.