Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
திமுக சாா்பில் ரேக்ளா போட்டி
பல்லடம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி புறவழிச் சாலையில் 400 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா போட்டிக்கு நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். இப்போட்டியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.பாலுசாமி, மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலாளா் பெத்தாம்பாளையம் எஸ்.ராஜசேகரன், இந்து அறநிலைய துறை மாவட்ட அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்கக் காசு, இரண்டாம் பரிசாக முக்கால் பவுன் தங்கக் காசு, மூன்றாம் இடத்துக்கு அரை பவுன் தங்கக் காசு வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 4 பேருக்கு கால் பவுன் தங்கக் காசு வழங்கப்பட்டது.