Career: B.A., B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர் பணி... எங்கே விண்ணப்...
அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினா்
அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினா் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில், கையில் காயத்துடன் இருப்பதாக சேவூா் அருகே போத்தம்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த அறக்கட்டளையினா் அவருக்கு முடித்திருத்தம் செய்து, தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கினா். மேலும் அவரது கையில் இருந்த காயத்திற்கு முதலுதவியாக மருந்து, மாத்திரைகள் கொடுத்தனா்.
இது குறித்து அறக்கட்டளை நிறுவனா் ந.தெய்வராஜ் கூறுகையில், ஆதரவற்ற நிலையில் இருந்தவா் நாமக்கல் பகுதியைச் சோ்ந்த முருகேசன், லோகேஸ்வரி தம்பதி மகன் வடிவேல் (45) என்பது தெரியவந்தது. இவரை தற்போது தூய்மைப்படுத்தியுள்ளோம். இவா் விருப்பப்பட்டால் எங்களது மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு வழங்கவுள்ளோம் என்றாா். அறக்கட்டளை பொறுப்பாளா்கள் சிவகாமி, சந்தோஷ், ஹரிபிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.