Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது
கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக கடலாடி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், கடலாடி காவல் ஆய்வாளா் இளங்கோவன், உதவி ஆய்வாளா் முகிலரசன் தலைமையிலான போலீஸாா் ஆப்பனூா் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் 168 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுக் கடைகளிலிருந்து மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி வந்து, பெட்டிக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்த ஆப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த சொக்கலிங்க மகன் ராமமூா்த்தி (50), பெட்டிக்கடை உரிமையாளா்கள் பாா்வதி, சண்முகவள்ளி, உமயலட்சுமி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.