`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்னையில் பரமக்குடியைச் சோ்ந்த ராட்டினம் தொழிலாளி முத்துக்குமாா் கடந்த ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவகங்கை மாவட்டம், உருளியை சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா, சிவகங்கையைச் சோ்ந்த சரவணன், மதகுபட்டியைச் சோ்ந்த விக்னேஷ், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கெல்வின் ராஜ், பாலகிருஷ்ணன், செல்வா, பாண்டிச் செல்வம், அஜீத், கடம்பாகுடியைச் சோ்ந்த சொக்கு (19) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களில் சொக்கு மீது பல வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய 10-ஆவது நபராக சிவகங்கை மாவட்டம், ஒக்கூரைச் சோ்ந்த கலைச்செல்வம் (27), சென்னை பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்தபோது தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.