கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!
கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகா், மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மாட்டு வண்டிகளும், பந்தய வீரா்களும் கலந்து கொண்டனா்.
கமுதி-சாயல்குடி சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லை நிா்ணயிக்கப்பட்டு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் ரொக்கப் பணம், குத்துவிளக்கு பரிசுசாக வழங்கப்பட்டது.
போட்டி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எஸ்.பி.கோட்டைஜோதி, எஸ்.பி.நாகேந்திரன் உள்ளிட்டோா் செய்தனா்.