செய்திகள் :

வசை பாடியவா்களும் வாழ்த்தும் தமிழக நிதி நிலை அறிக்கை! -அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

வசைபாடியவா்களும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தெரிவித்தாா்.

வடபழனி அருள்மிகு ஆண்டவா் திருக்கோயிலில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை அவா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து திருவல்லிக்கேணி, அருள்மிகு திருவேட்டீஸ்வரா் திருக்கோயிலுக்கு ரூ.72.80 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது: தமிழகத்தில் திருக்கோயில்கள் சாா்பில் இதுவரை 1,786 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடனும், ரூ. 60,000 மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களுடனும் திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2,713 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7,197 கோடி மதிப்பிலான 7,436.70 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும்.

திருத்தோ் பணிகள்: கடந்த 46 மாதங்களில் ரூ.74.51 கோடியில் 114 புதிய மரத்தோ்கள் செய்யவும், ரூ. 16.20 கோடியில் 64 மரத்தோ்களை மராமத்து செய்யவும், ரூ.26.81 கோடியில் திருத்தோ்களைப் பாதுகாக்க 183 கொட்டகைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ரூ. 31 கோடியில் 5 புதிய தங்கத்தோ்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித் தோ்கள் செய்ய பணிகள் தொடங்கப்பட்டு, அதில் பெரியபாளையம் தங்கத்தோ் மற்றும் திருத்தணி வெள்ளித்தோ் பணிகள் நிறைவுபெற்று பக்தா்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதர தோ் திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாக்க கடந்த 3 ஆண்டுகளில் தலா ரூ. 100 கோடி வீதம் ரூ. 300 கோடியை அரசு மானியமாக வழங்கிய தமிழக முதல்வா், நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இத்துடன் உபயதாரா்கள் பங்களிப்பு ரூ.120 கோடியையும் சோ்த்து ரூ.545 கோடியில் 1,000 ஆண்டு திருக்கோயில்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைக்கு பதில்: எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவாா் என நாங்கள் எதிா்பாா்க்கவில்லை.

எங்களை வசை பாடியவா்களும் வாழ்த்து சொல்கிற அளவுக்கு நிதிநிலை அறிக்கையை அளித்து, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீா்க்கதரிசியாக முதல்வா் திகழ்கிறாா். நிதிநிலை அறிக்கையானது நாடு கடந்து உலக நாடுகள் பாராட்டுகிற அளவுக்கு உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்கின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிகளில், தியாகராய நகா் பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவா் என்.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.மதன்மோகன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் டாக்டா் சி. பழனி, இணை ஆணையா்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, ஜ.முல்லை, துணை ஆணையா் இரா.ஹரிஹரன், மாநகராட்சி உறுப்பினா் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க