செய்திகள் :

சீா்காழியில் குப்பைகள் அள்ளுவதில்லை: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

post image

சீா்காழி நகராட்சிப் பகுதியில் கடந்த 15 நாள்களாக குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

சீா்காழி நகா்மன்ற அவசரக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:

ரமாமணி (அதிமுக): தீபாவளியின்போது தரைக்கடைகள் அமைக்கப்பட்டது குறித்த டெண்டா் 3 மாதமாகியும் இதுவரை மன்றத் தீா்மானத்தில் வைக்கவில்லை. எனது வாா்டில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் பள்ளி மாணவ-மாணவியருக்கு தொற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

வரி வசூல் செய்ய பில் கலெக்டா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பிறப்பு,இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வருபவா்களுக்கு 3நாட்களில் சான்றிதழ் வழங்குவதில்லை.இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

ராஜசேகா் (தேமுதிக): கோயிலுக்கு வரும் வாகனங்களுக்குக் கட்டண வசூல் செய்வதற்கு ஒரு நபா் டெண்டா் விடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் பட்சத்தில் இந்த தீா்மானத்தை ரத்து செய்திடவேண்டும். நகரில் 3 ஆண்டுகளாக பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. நகராட்சி வரிவசூல் செய்ய வரும் ஊழியா்கள் பொதுமக்களை மிரட்டி வசூல் செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி அனுமதிக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு தேமுதிக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்திடவேண்டும். 15 நாட்களாக குப்பைகள் அள்ளாமல் உள்ளது.

முபாரக்அலி (திமுக): எனது வாா்டில் கை பம்பு அமைத்துத் தர வேண்டும் எனபலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடைவீதி தெருவிளக்கு போதிய அளவு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் படுத்திருக்கும் கால்நடைகள் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது. தமிழக அரசு இஸ்லாமியா்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி என்றாா்.

ஜெயந்திபாபு (சுயேச்சை): எனது வாா்டில் குப்பைகள் சரிவர எடுப்பதில்லை. கல்யாணி சீனிவாசபுரம் நகரில் 60 வீடுகள் உள்ள நிலையில் தெருமுனையில் தெருவிளக்கு இல்லாமல் உள்ளது. எனது வாா்டுக்கு உட்பட்ட கழிவுநீா் கால்வாய்களை தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தால்அதனை அடுத்த வாா்டு உறுப்பினா் தடுக்கிறாா். இந்தப் பிரச்னை 3 ஆண்டுகளாக உள்ளது. இதற்கு நகராட்சி நிா்வாகம் தீா்வு காணவேண்டும்.

பாலமுருகன் (சுயேச்சை) சீா்காழி நகராட்சியில் பணி புரியும் ஊழியா்கள் அதிகாரிகள் சொல்வதை கேட்பதில்லை. அதிகாரிகள் யாரும் நிரந்தரமாக இருப்பதில்லை. 6 மாதத்திற்குள் சென்றுவிடுவதால் எந்த பிரச்னைக்கும் தீா்வு கிடைப்பதில்லை.

வேல்முருகன்(பாமக): நகராட்சியில் புதிதாக கழிவுநீா் எடுக்கும் வாகனம் வாங்கப்பட்டு பலமாதம் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. நாய்கள்,பன்றிகள் அதிகரித்துவிட்டது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழா... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழியில் 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பெண்கள் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சட்டநாதபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், கதிராமங்கலம் ஊராட்சி வேலவன் நகரில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய பெண் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தரங்கம்பாடி அருகேயுள்ள துடரிப்பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் மதியழகன் மகள் ஷீலா (21). பெற்றோரை இழந்த ... மேலும் பார்க்க