செய்திகள் :

தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு!

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நேற்று அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்தித்து பேசினார்.

இதையும் படிக்க: 2020, நவம்பருக்குப் பின் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்க உத்தரவு

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை தனது காதில் வைத்து செல்ஃபோனில் பேசுவது போல சைகை காட்டிவிட்டு விஜய்யின் வீட்டிற்குள் வீசினார்.

இந்தச் சம்பவத்துக்கான விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், செருப்பை வீசி நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக, விஜய் மீது முட்டை வீசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்தக் காலணி வீச்சு சம்பவமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

உள்ளூரிலேயே விலைபோகாதவர் பிரசாந்த் கிஷோர்: கே.என். நேரு

உள்ளூரிலேயே விலைபோகாத பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இங்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

செய்தியாளரை நெஞ்சில் தாக்கிய விஜய் பவுன்சர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலைய... மேலும் பார்க்க

விஜய் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை: பிரசாந்த் கிஷோர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெறும் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது.... மேலும் பார்க்க

2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்

2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வரலாறு படைக்கும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மேலும், 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலைப் போல நாங்கள் மாற்றத்தை உருவாக்கப் போகிறோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்... மேலும் பார்க்க

தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்த நிலையில், அதில் கையெழுத்திட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகம் தொட... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம்... மேலும் பார்க்க