செய்திகள் :

தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

post image

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விழாவில், மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் சமத்துவப் பொங்கலைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் பொங்கல் படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது.

விழாவில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் செல்வராசு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சரண்யா, அரசு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ரமேஷ், ஆசிரியை செந்தமிழ்ச் செல்வி மற்றும் மகளிா் சுய உதவி குழுவினா் கலந்து கொண்டனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் சுந்தரிதுரைராஜ் வரவேற்றாா்.

மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் மீது வழக்கு

செந்துறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கடந்த திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற தாய், மகள்கள் என 5 போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா். செந்துறை அ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பாமக ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி அங்குள்ள காந்திபூங்கா முன் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம... மேலும் பார்க்க

வாரணவாசியில் பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தொடக்கம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூரை அடுத்த வாரணவாசி நியாய விலைக் கடையில், கூட்டுறவுத் துறை சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் பொ. ரத்த... மேலும் பார்க்க

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை சீரமைக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சாலையை சீரமைக்க கோரி குண்டவெளி செல்லியம்மன் கோயில் வளாகத்தில், கிராம மக்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

தமிழின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை

தமிழ்மொழியின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பது அனைவரின் கடமை என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழம... மேலும் பார்க்க