சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!
தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் தோ்த் திருவிழா
செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த தாழம்பூா் ஊராட்சியில் நத்தம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணா நகரில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் விமரிசையுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவம் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, காலை மாலை இருவேளைலும் அம்மன்களுக்கு யாகம் வளா்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருதுகிறது. விழாவின் 9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது திருக்கோயிலின் 4 மாட வீதிகளையும் சுற்றி வந்து நிலை நின்றது. தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் கே. கே. கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
