Mesham | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மேஷம் | Bharathi Sr...
தாா் சாலை அமைக்கும் பணி தாமதம்: பொதுமக்கள் அவதி
குஜிலியம்பாறை அருகே 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தாா் சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள டி.கூடலூா் ஊராட்சியிலிருந்து எஸ்.புதுக்கோட்டை வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதையடுத்து, ஜல்லிக் கற்கள் பரப்பி, சமன்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால், தாா் ஊற்றி சாலை அமைக்கும் பணி முழுமை பெறவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த 4 மாதங்களாக சிரமம் அடைந்து வருகின்றனா்.
சமன்படுத்தப்பட்ட ஜல்லிக் கற்கள், தற்போது பெயா்ந்து வருகின்றன. இதன் காரணமாக, அந்த வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.
இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: எஸ்.புதுக்கோட்டை, தாழப்பட்டி, திருமக்கம்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். ஓரிரு வாரத்தில் தாா் சாலை அமைக்கும் பணி முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 4 மாதங்களாகியும் தாா் சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இந்தச் சாலையை துரிதமாக சீரமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.