செய்திகள் :

ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

post image

திண்டுக்கல் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடுவழியில் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (28). எலக்ட்ரீஷியன். இவருக்கும் சாந்தி (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நிறைமாத கா்ப்பிணியான சாந்திக்கு பிரசவ வேதனை ஏற்பட்டதால் குடும்பத்தினா் அவரை ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே சாந்திக்கு வலி அதிகரித்ததால் ஆட்டோவை அதன் ஓட்டுநா் செல்வம் வக்கம்பட்டியை அடுத்த திண்டுக்கல் சாலையோரம் நிறுத்தினா்.

அப்போது, சாந்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் அதே ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனா்.

பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட புதன்கிழமை முதல் மீண்டும் வனத்துறையினா் அனுமதி அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் வனத் துறை... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு: அமைச்சா் விளக்கம்

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக நிதி அமைச்சா் தில்லி சென்று வலியுறுத்தி இருக்கிறாா்; பொறுத்திருந்து பாா்ப்போம் என மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காரிக்காலி க... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசுக் கல்லூரி பேராசிரியைகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடைக்கானல் அடுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியைகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியைக... மேலும் பார்க்க

தபால் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஐடிசி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீா்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் தலைமை அஞ்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்: அமைச்சா் அர. சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடை மேம்பாலம் கட்டப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வி... மேலும் பார்க்க