20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எ...
இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை
சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காரிக்காலி கிராமத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(25). பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் இதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்திச் சென்றாா். இதையடுத்து, சிறுமியைக் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வடமதுரை அனைத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி. வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தாா் நீதிபதி.