செய்திகள் :

"திமுக அரசின் நில எடுப்புப் பணிகளால் தமிழகமே போராட்ட களமாகியுள்ளது" - ஆர்.பி. உதயகுமார் சொல்வதென்ன?

post image

திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலைப் பணிகள் என்றாலும், புதிய கட்டடங்கள் என்றாலும் வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது தனியார் நிலங்களை அரசு சரியாகக் கையகப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் போராட்டம்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2500 ஏக்கருக்கும் அதிகமாக நிலத்தை மக்களின் ஒத்துழைப்போடு கையகப்படுத்தி வழங்கினார். மக்களுக்கான திட்டங்களை அறிவித்த அடுத்த நாளே, அதற்கான நிலத்தை ஒப்படைக்கிற பணியை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்வதிலும், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலும், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு செய்தார். ஆனால், சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திவ்யா தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலம் வழங்கிய பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கேட்டுப் போராடி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்த நிலங்களைக் கையகப்படுத்தாமல் அண்டர் பாஸ் மூலம் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் முன்மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசு மூலம் அரசாணை வெளியிட்டார். எடப்பாடியார் கொண்டு வந்த திட்டம் என்பதால், தி.மு.க அரசு அதை மறுத்துக் கைவிடப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழிச்சாலை போன்ற பல திட்டங்களுக்கு நில எடுப்பு பணியின்போது அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களைத் தூண்டிவிட்டார்கள். அதற்கு உரிய விளக்கத்தை மக்களிடத்தில் சொல்லி 11 மருத்துவக் கல்லூரிகள், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அமைத்துக் கொடுத்தார்

ஆர்.பி. உதயகுமார்

தற்போது தி.மு.க அரசில் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. மதுரை முல்லை நகர்ப் பகுதியில் நிலம் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

தி.மு.க அரசு மக்களை இன்று வீதியில் நிறுத்தி இருக்கிறது. இதற்கு உரிய பதிலை, உரிய பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஸ்டாலினுக்குப் புகட்டுவார்கள். மக்கள், தங்களுக்கு ஆதரவாக, ஒரே நம்பிக்கையாக, எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என நினைக்கிறார்கள். மக்களின் நம்பிக்கை நிறைவேறுகிற காலம் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

உதயநிதி விழா குழப்பம்; தவிக்கும் அமைச்சர் டு `தங்கை’ தலைவி; கொதித்த `கதைசொல்லி’ தலைவர் | கழுகார்

அட்வைஸ் செய்த கார்கே!தி.மு.க - காங்கிரஸ் உறவு...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்யச் சென்றிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. கூட... மேலும் பார்க்க

Winter Session: `ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரியம்’ - திட்டமிடும் பாஜக; தயாராகும் எதிர்க்கட்சிகள்

வரும் 25-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது. முன்னதாக 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அதில், 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்... மேலும் பார்க்க

மதுரை: ``எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்... " - ஆதவ் அர்ஜுனா பேச்சு

"திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம், அப்போதுதான் தீர்வு கிடைக்கும்..." என்று விசிக ... மேலும் பார்க்க

"எங்கள் முதலமைச்சருக்கு மதுவில் வரும் வருமானம் தேவையில்லை... ஆனால்..." - சொல்கிறார் ரகுபதி

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராயம் சம்பவம் வருத்தத்துக்கு... மேலும் பார்க்க

"பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா?" - வைரல் வீடியோவுக்கு அன்பில் மகேஸ் விளக்கம்

நேற்று (நவம்பர் 20) இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸிடம், அவரது இரண்டாவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு; காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க