திமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோடு: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக, திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களை தரக்குறைவாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சா் அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்தும், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விநிதியை வழங்கமாட்டோம் என கூறும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்த
னா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய கல்வி அமைச்சரை கண்டித்தும், தமிழகரசுக்கு கல்வி நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.