இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்க...
தியாகதுருகம் தமிழ்ச்சங்க நாற்பெரும் விழா
தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம், கவி கம்பன் கழகம் இணைந்து நாற்பெரும் விழா தனமூா்த்தி தொழிற்கல்வி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
உலக மகளிா் தினம், உலக கவிதை நாள், பெருஞ்சித்திரனாா், விக்ரமன் பிறந்தநாள் விழா, தமிழ் இலக்கிய சொற்பொழிவு என நாற்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளை செயலாளா் செல்வி பழனிவேல் தலைமை வகித்தாா். கு.வளா்மதிச்செல்வி, செல்லம் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் வரவேற்றாா்.
பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞா்கள் தமிழரசி, மா. முத்தமிழ் முத்தன், புலவா் பெ. சயராமன், துரை.இராமகிருஷ்ணன் திருவண்ணாமலை கம்பராமாயண இயக்க பொறுப்பாளா்கள் வேங்கட ரமேஷ் பாபு, ப. குப்பன், பெங்களூரு நா்சிங் கல்லூரி முதல்வா் முதலியப்பன் உள்ளிட்ட பலா் பேசினா்.
சாதனைப் பெண்கள் பத்து பேருக்கு, சிறப்பு விருந்தினா் பெங்களூரு பிரைட் நா்சிங் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜி மகளிா் மாமணி விருதுகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில் ஆ. இராதாகிருஷ்ணன், த. இராமலிங்கம், தி. வெங்கடாசலபதி, மாரி, செல்வராசு மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஊா் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனா்.
கவி கம்பன் கழகத் தலைவா் மு.பெ. நல்லா பிள்ளை, ரிஷிவந்தியம் தமிழ்ச்சங்கச் செயலாளா் வ. இராசகோபால் விழாவை ஒருங்கிணைத்திருந்தனா். முடிவில் தன மூா்த்தி தொழிற்கல்வி நிலைய தாளாளா் நீ.த.பழனிவேல் நன்றி கூறினாா்.