செய்திகள் :

இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்குதல்!

post image

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று (ஏப்.7) ஏராளமான மக்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களானது சில மணிநேரங்களில் வன்முறைக்களமாக மாறி டாக்கா, ஷைலட், சட்டோக்ராம், குல்னா, பரிஷால், கும்மில்லா ஆகிய நகரங்களிலுள்ள பாட்டா, கே.எஃப்,சி. மற்றும் டாமினோஸ் பிட்சா ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

இந்தத் தாக்குதலானது காஸாவில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இஸ்ரேலை அந்நிறுவனங்கள் ஆதரிப்பதினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரவு முதல் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்குள்ள விடியோ பதிவுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் வங்கதேச நேஷனலிஸ்ட் கட்சி, வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகள் இஸ்ரேலைக் கண்டித்து இரண்டாவது நாளாக இன்று (ஏப்.8) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:போர்ச்சுகல் மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசுத் தலைவர் மரியாதை!

மதுரையில் பிரபரல தொழிலதிபர் கடத்தல்: 9 பேர் கைது

மதுரை: சொத்துக்காக மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரை கடத்திய வழக்கில் தனிப்படை போலீஸாா் 9 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சேர்ந... மேலும் பார்க்க

துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!

துருக்கி நாட்டிலிருந்து 1,75,000-க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஸாத் குடும்ப... மேலும் பார்க்க

தடாலடியாக உயர்ந்து புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வரலாறு காணாத புதிய உச்சமாக வியாழக்கிழமை(ஏப்.17) பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை, புதுப்ப... மேலும் பார்க்க

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க