MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தடாலடியாக உயர்ந்து புதிய உச்சமாக ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வரலாறு காணாத புதிய உச்சமாக வியாழக்கிழமை(ஏப்.17) பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த வாரம் புதன்கிழமை(ஏப்.9) தடாலடியாக சவரனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ.67.280-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கும், சனிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160 ஆக புதிய உச்சத்தைத் தொட்டது. நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ.4,365 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை( ஏப்.14) சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040-க்கும், செவ்வாய்க்கிழமை( ஏப்.15) சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,720-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை( ஏப்.16) தடாலடியாக பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520 -க்கும், கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ. 8,815-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், நாளுக்கு நாள் தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக வரலாறு காணாத புதிய உச்சமாக வியாழக்கிழமை(ஏப்.17) பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும், கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ. 8,920-க்கும் விற்பனையாகி வருகிறது.
வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குவதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகவும், சேமிப்பிற்காக தங்கம் வாங்கும் எளிய மக்கள் அதிர்ச்சியடைள்ளனர்.
வெள்ளி நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.