செய்திகள் :

துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!

post image

துருக்கி நாட்டிலிருந்து 1,75,000-க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஸாத் குடும்பம் ஆட்சி செய்து வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு போரில் கிளர்ச்சிப்படையினர் வெற்றி பெற்று பஷார் அல்-அஸாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இந்தப் புரட்சியின் மூலம் கிளர்ச்சிப்படையினரின் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டு சிரியாவை மீண்டும் சர்வதேச அங்கீகாரமுள்ள நாடாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தப்பித்து துருக்கி போன்ற அதன் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான சிரியா மக்கள் மீண்டும் தங்களது தாயகத்திற்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

இதில், கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் துருக்கியில் தஞ்சமடைந்திருந்த 1,75,512 சிரியா மக்கள் தாமாக முன்வந்து தங்களது தாயகம் திரும்பியுள்ளதாகவும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் அந்நாட்டிலிருந்து தங்களது தாயகம் திரும்பிய சிரியா மக்களின் எண்ணிக்கையானது 9,15,515 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

இந்தக் குடிபெயர்வில் 33,730 குடும்பங்கள் பாதுகாப்பான முறையில் தங்களது தாயகம் திரும்பியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவொரு ஒழிவு மறைவுமின்றி ஐக்கிய நாடுகளின் அகதிகள் மேலாண்மை சபை ஆணையரின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் துருக்கி அதிகாரிகளால் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான வசதிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்தபோது சிரியாவுடன் மிகப் பெரியளவில் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் துருக்கியில் சுமார் 36 லட்சம் சிரியா மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அஸாத்தின் ஆட்சிக் கவிழ்பிற்கு பின்னர் அண்டை நாடுகளிலிருந்து சுமார் 4,00,000-க்கும் மேலான குடிமக்கள் சிரியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?

துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் ச... மேலும் பார்க்க

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார். மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் வழிபாடு: ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்!

சென்னை: திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், ஆதிக்க சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.விழுப்புரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்

சென்னை: அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ண... மேலும் பார்க்க

ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவைகளை எந்தெந்த நேரங்களில் இயக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க