சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
திருநெல்வேலி: கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நியாய விலைக்கடை... மக்கள் அதிருப்தி!
திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தான் அப்பகுதியின் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.
அண்ணாநகர், பெரியார் நகர், இந்திரா நகர், pnk காலனி மற்றும் M.G.R நகரில் பாதி தெருக்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நியாய விலைக்கடையில் தான் பொருள்கள் வாங்கி வருகின்றனர். எனவே தங்களுக்கென்று புதிய நியாய விலைக்கடை அமைக்கப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கை ஏற்று 2022- 2023 தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக்கடையின் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் புதிய நியாயவிலைக்கடை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது.
புதிய நியாயவிலைக்கடை கட்டி முடித்து 4 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் கடை திறக்கப்படாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதைப்பற்றி துணை பதிவாளர் கார்த்திக் அவர்களிடம் கேட்டபோது, "புதிய நியாய விலை கடை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. புதிய நியாய விலை கடை எங்கள் அலுவலகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட பின் கடையை திறப்பதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்" என்று கூறினார்.
எப்பொழுது புதிய நியாய விலை கடை திறந்து, மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.