நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
UP: ``பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக் கூடாது; ஜிம்மிலும் No Male Trainers'' -மகளிர் ஆணையம் பரிந்துரை!
உத்தரபிரதேச மகளிர் ஆணையம் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சில தீவிர நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
ஆண் தையல்காரர்கள் பெண்களுக்கு அளவெடுக்கக் கூடாது, ஆண் பயிற்சியாளர்கள் ஜிம் மற்றும் யோகா மையம் போன்ற இடங்களில் பெண்களுக்கு பயிற்சி வழங்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்த பரிந்துரைகள் வலியுறுத்தியிருக்கின்றன.
இந்த பரிந்துரைகள் வணிக மையங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக வழங்கப்பட்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்துடன் பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாவலர் இருத்தல், பெண்களுக்கான ஆடையகங்களில் பெண் பணியாளர்களை மட்டும் அமர்த்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.
மகளிர் ஆணைய உறுப்பினரான மனீஷா அஹ்லாவத் டைம்ஸ் ஆஃப் இந்தியா வலைத்தளத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அவர், "இந்த பரிந்துரைகள் குறித்து முதற்கட்ட விவாதம்தான் தொடங்கியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இவற்றை மையமாக வைத்து கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் அரசுக்கு சமர்பிக்க உள்ளோம்." என்று கூறியுள்ளார்.
இந்த பரிந்துரைகளை ஷாம்லி மாவட்டத்தில் சோதனை முறையாக அமல்படுத்தியிருக்கின்றனர். மாவட்ட நன்னடத்தை அதிகாரி ஹமீது ஹுசைன், "பள்ளி வாகனங்களில் பெண் பாதுகாவலர் அல்லது ஆசிரியர் மாணவர்களுடன் செல்ல தேவைப்படுகிறார், தையலகங்களில் பெண்களுக்கு அளவெடுக்க பெண் பணியாளர் இருப்பதுடன் சிசிடிவியும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, பயிற்சி மையங்களில் சிசிடிவி மற்றும் கழிவறை வசதிகள் கோரப்பட்டுள்ளன, பெண்களுக்கான ஆடைகள் மற்றும் அலங்கார பொருள்கள் இருக்கும் கடைகளில் பெண் ஊழியர்களை அமர்த்தக் கூறப்பட்டுள்ளது." என்றுக் கூறியுள்ளார்.
இந்த பரிந்துரைகளுக்கு சிலர் வரவேற்பளித்தாலும், பலரும் உபி அரசு தாலிபான் கொள்கைகளை நகலெடுப்பதாக விமர்சித்துள்ளனர். மகளிர் ஆணையம் பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட பரிந்துரைகளை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs