செய்திகள் :

Vivek Ramaswamy: ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி?

post image

Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்த நபர் விவேக் ராமசாமி. குடியரசு கட்சியின் வளர்ந்துவரும் அரசியல்வாதியான இவர் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் கூட பங்கேற்றார்.

ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசு கட்சியின் வெற்றிக்காக பணியாற்றிவந்தார் விவேக் ராமசாமி. ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு அவரை, "He is an American Badass" என்று புகழ்ந்திருக்கிறார் விவேக்.

விவேக் ராமசாமி

"அவர்கள் அவரை தகுதி நீக்கம் செய்ய முயன்றனர். சிறையில் அடைக்கவும், இரண்டு முறை அவரைக் கொலை செய்யவும் முயன்றனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அவர்கள் அவரைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். அமெரிக்க மக்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்" என்று ட்ரம்ப்பின் வெற்றி குறித்துப் பேசியுள்ளார் விவேக் ராமசாமி.

இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, தடையற்ற சந்தை முதலாளித்துவத்தை ஆதரிப்பதும் கார்பரேட் விழிப்புணர்ச்சி பற்றிய அவரது பேச்சுகளும் குடியரசு கட்சியில் அவரது செல்வாக்கை உயர்த்த உதவின.

தேர்தலில் ட்ரம்ப்பின் 'பொருளாதார பிரசாரங்களில்' பங்கேற்றார். தொழில் வளர்ச்சி மற்றும் 'இடதுசாரி தன்மைகளுக்கு' எதிரான இவரது பிரசாரங்கள் களத்தில் எடுபட்டன.

அமெரிக்கா எப்போதும் விதிவிலக்கான, உலகிலேயே சக்தி வாய்ந்த நாடாக இருக்க விரும்புகிறது எனப் பேசிய ராமசாமி, "ட்ரம்ப்பின் கம்பேக், அமெரிக்காவின் கம்பேக்" என்றதுடன், "நம் நாட்டுக்கு இப்போது ஒரு Badass Commander-in-Chief தேவை. சரியாக அதைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்" என்றும் பேசியுள்ளார்.

விவேக் ராமசாமி தனது தேர்தல் பணிகள் மூலம் ட்ரம்ப்பின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். ட்ரம்ப் எதிர்காலத்தில் விவேக் ராமசாமி சிறந்த தலைவராக உருவாக வாய்ப்புள்ளதாக பேசியிருக்கிறார்.

ட்ரம்ப்

பென்சில்வேனியாவின் ஸ்க்ரான்டன் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் விவேக் ராமசாமியை "He is Smart as Hell" எனப் புகழ்ந்தார் ட்ரம்ப்.

"இவர் நமது நிர்வாகத்தில் இடம்பெறுவார் என நம்புகிறேன். இவரை அரசின் பெரிய துறைகளில் அமர்த்தினாலும் நாம் சிந்திக்கும் வேறுயாரையும் விட சிறப்பான வேலையைச் செய்துமுடிப்பார் விவேக்" என்று பேசினார் ட்ரம்ப்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முயற்சித்தவர்களுள் மிகவும் இளையவர் விவேக் ராமசாமி (38). ட்ரம்ப் மீண்டும் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தொடர்ந்து கட்சியின் பிரதிநிதியாக ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு உதவினார். குடியரசு கட்சியைப் பொருத்தவரையில் எதிர்காலத்தில் சிறந்த தலைவராகக்கூடிய ஆற்றல் கொண்டவராக விவேக் ராமசாமி திகழ்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்! | Elangovan Explains

இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,விஜயிடம் நெருங்கும் பா.ம.க? அன்புமணியின் அரசியல் கணக்கு! விஜய்-ன் 5 தோட்டாக்கள்... பொங்கல் பிளான்! எடப்பாடியின் 10 பேர் படை... வெற்றிக்கொடி நாட்டுவார்களா?! அவற்றை முழு... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நியாய விலைக்கடை... மக்கள் அதிருப்தி!

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தான் அப்பகுதியின் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.அண்ணாநகர், பெரியார் நகர், இந்திரா ... மேலும் பார்க்க

The Satanic Verses: ``அரசாணையை கண்டுபிடிக்க இயலவில்லை" -சல்மான் ருஷ்டி புத்தகத்தின் மீது தடை நீக்கம்

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகமான 'The satanic Verses' மீதான 36 ஆண்டுகால தடையை நீக்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்."தி சாத்தானிக் வெர்சஸ்" என்ற புத்தம் வெளியிடப்பட்டபோது, அது இஸ்லாமிய தூத... மேலும் பார்க்க

மதுரை: மக்களை ஈர்க்கும் வேளாண் சுற்றுலா... கூத்து, கொண்டாட்டத்துடன் பிரபலமாக்கும் சுற்றுலாத்துறை!

ஆன்மிக சுற்றுலா, பசுமை சுற்றுலா, வரலாற்று தொல்லியல் சுற்றுலா, உணவு சுற்றுலா வரிசையில் தற்போது வேளாண் சுற்றுலா மதுரையில் பிரபலமாகி வருகிறது.வேளாண் சுற்றுலாஅக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டின் அரசி... மேலும் பார்க்க

UP: ``பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக் கூடாது; ஜிம்மிலும் No Male Trainers'' -மகளிர் ஆணையம் பரிந்துரை!

உத்தரபிரதேச மகளிர் ஆணையம் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சில தீவிர நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.ஆண் தையல்காரர்கள் பெண்களுக்கு அளவெடுக்கக் கூடாது, ஆண் பயிற்சியாளர்கள் ஜிம் மற்றும் யோகா மையம் போன்ற... மேலும் பார்க்க

Kamala Harris தோல்விக்கான 8 முக்கிய காரணங்கள் | US Election 2024 | Donald Trump

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதில் கமலா ஹரிஸ் தோல்விக்கான 8 காரணங்... மேலும் பார்க்க